/* */

ஆர்.புதுப்பட்டியில் வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் துவக்கிவைப்பு

ஆர்.புதுப்பட்டியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆர்.புதுப்பட்டியில்  வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர்  துவக்கிவைப்பு
X

ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் நடைபெற்ற நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட துவக்க விழாவில், அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

ஆர்.புதுப்பட்டியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் துவக்க விழா ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 985 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நீர் வழிப்பாதை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின், நகர பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில், அவர்களது வசிப்பிடத்தின் அருகிலேயே வேலைவாய்ப்பு பெறும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டவுன் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் சுமதி, துணைத் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாலச்சந்திரன், செயல் அலுவலர் கத்திரினாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு