/* */

பரமத்தி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு: எம்எல்ஏ சேகர் நேரில் ஆய்வு

பரமத்தி வேலூர் தாலுக்கா, பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பரமத்தி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு: எம்எல்ஏ சேகர் நேரில் ஆய்வு
X

பரமத்திவேலூர் தாலுக்கா, பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. நல்லூர், கபிலர்மலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படுவதாக கூறப்படுகிறது. பரமத்தி பகுதியில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு டோக்கன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக எம்எல்ஏசேகருக்கு புகார் வந்தது.

இதையொட்டி அவர் பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பொதுமக்களுக்கு முறையாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 200 தடுப்பூசிகள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்ற 140 பேருக்கு செலுத்தப்பட்டது. சிறப்பு ஒதுக்கீடாக முன்களப் பணியாளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆய்வுக்குப்பின் இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே தடுப்பூசிகள் செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டாக்டர்களிடம் எம்எல்ஏதெரிவித்தார்.

Updated On: 20 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  2. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  3. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  4. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  5. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  7. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  10. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்