/* */

நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்க வேண்டாம்: சீமான்

நாமக்கல்லில் தீவிர பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நோட்டை வாங்கிக் கொண்டு, ஓட்டை விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

HIGHLIGHTS

நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்க வேண்டாம்: சீமான்
X

நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் டாக்டர். பாஸ்கர், ரோகினி, யுவராணி ஆகியோருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும் போது ஆட்சியில் உள்ளவர்களை அகற்றி விட்டு மற்றொருவரை ஆட்சியில் அமர வைப்பதற்கு பதிலாக ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என மக்களுக்கு நன்மை செய்வதோடு மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் ஆட்சிக்கு வர வாக்களிக்க வேண்டும்,

கட்சியை வளர்ப்பதற்கு கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் மாறி மாறி திமுக அதிமுகவிற்கு வாக்களிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை மட்டுமே பற்றி சிந்திப்பார்கள், தலைவர்கள் தான் அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பார்கள் என்றும், தேர்தல் வரும் போது மட்டுமே மக்களை பற்றி திமுகவும், அதிமுகவும் சிந்திப்பதாகவும், இன்று மற்ற அரசியல் கட்சியினர் வைத்துள்ள கூட்டணிகள் கொள்கை இல்லாத கூட்டணி கொள்ளை அடிக்கும் கூட்டணி எனவும் விமர்சித்தார்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை பற்றி தற்போது பேசும் ஸ்டாலின் கடந்த முறை மேயராக இருந்த போது யார் அகற்றினார்கள்?, எனவும் கேள்வி எழுப்பினார். நம் வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நோட்டை கொடுத்து நாட்டை விற்கிறார்கள்.

நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதன்காரணமாக நூலகங்களை மூடி விட்டு சிறைச்சாலையை விரிவாக்கம் செய்து வருவதாகவும், கருத்து கணிப்பை என்ற பெயரில் குப்பையை அள்ளி போட்டு நெருப்பை அணைக்க முடியாது என்றும், மே-2-ம் தேதிக்கு பிறகு நாம் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்,

தமிழ்நாட்டில் தகுதியான தலைவர்களை கூற முடியுமா? ஒரே மேடையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் என்னுடன் நேரிடையாக விவாதிக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

Updated On: 26 March 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்