/* */

குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை: கணவன் தற்கொலை

குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இன்ஜியர் தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை: கணவன் தற்கொலை
X

பைல் படம்

நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள, கொங்கு நகர் முதல்மாடியில் வசித்து வருபவர் மனோகரன் (55) இன்ஜினியர். இவர் ஓமன் நாட்டில் ஒரு தனியார் கம்பெனியின் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா (47), மகன் ராகுல் (24), இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.டெக் படித்து வருகிறார். பல ஆண்டுகளாக கணவன் மனைவிக்கும் இடையில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, விடுமுறையில் மனோகரன் ஊருக்கு வந்துள்ளார். மகனுக்கு செலவு செய்து, வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல், அவரது சம்பளத்தில் இருந்து பணத்தை பெற்றோருக்கு கொடுப்பதாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகரறாறு ஏற்பட்டு, வீட்டில் இருந் த கத்தியை எடுத்த மனோகரன், மனைவி அனிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த அறையில் மனோகரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதிகாலையில், பழைய வீட்டில் இருந்த மகன் ராகுல், கொங்கு நகரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 13 April 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?