/* */

திமுகவிற்கு போடும் ஓட்டு பிரயோஜனம் இல்லாத ஓட்டு: பாஜ தலைவர் அண்ணாமலை விளாசல்

திமுக கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பிரயோஜனம் இல்லாத ஓட்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

HIGHLIGHTS

திமுகவிற்கு போடும் ஓட்டு பிரயோஜனம் இல்லாத ஓட்டு: பாஜ தலைவர் அண்ணாமலை விளாசல்
X

நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பரமத்தியில், பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திமுக கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பிரயோஜனம் இல்லாத ஓட்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் பாஜ தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியாவில், பிரமதர் மோடி 3வது முறையாக பிரதமராக அமரும்போது தமிழகத்தில் இருந்து, பாஜ சார்பில் அதிக அளவில் எம்.பியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திரம் படைக்கும். மோடி தாத்தா தான் 3வது முறையாக ஆட்சி அமைப்பார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இம்முறை 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சி அமைக்கும். தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான் முக்கியம். திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாது. இண்டியா கூட்டணியின் நிலைமை இப்படித்தான் உள்ளது. இண்டியா கூட்டணியினர் அரசியலில் கேலிக்கூத்து செய்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பிரயோஜனம் இல்லாத வாக்காகும்.

அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை 29 பைசா மோடி என அழைப்பாராம். அடிப்படையில் எதுவுமே தெரியாதவர் உதயநிதி. எனவே நாமும் உதயநிதி ஸ்டாலினுக்கு கஞ்சா உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைப்போம். சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என எல்லாத விலையும் உயர்த்திவிட்டு முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார். முதல்வருக்கு விலை உயர்வு முதல்வர் என பெயர் வைப்போம். திமுக மற்றும் அதன் கூட்டணிக்குப் போடும் ஓட்டு பாவ ஓட்டு. அந்த பாவத்தை தமிழக மக்கள் செய்யக்கூடாது.

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாய கவுரவ நிதி திட்டத்தில், ஆண்டு தோறும் ரூ. 6 ஆயிரம் நிதி உதவியை 85,505 விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு மூலம் மகளிர்க்கு கேஸ் சிலிண்டர், தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரி, மேம்பாலங்கள், முத்ரா திட்டம், மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், குடிநீர் திட்டம் போன்ற ஏராளமான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தும் நிதியை, திமுக அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசு குறைவாக நிதி தருவதாக மக்களை ஏமாற்றுகின்றனர். காரணம் அந்தத் தொகையில் ஊழல் செய்ய முடியாது என்பதால். தமிழகத்தில் திமுக கட்சி தாத்தா, அப்பா பெயரை வைத்து அரசியல் செய்கின்றார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக அளித்த 517 தேர்தல் வாக்குறுதியில், 20 வாக்குறுதி கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக அளித்த தேர்தல் அறிக்கையில் 295 வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதில் 295 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது. அவை அனைத்தும் கனமான வாக்குறுதிகள். இவை 70 ஆண்டுகளாக நாட்டில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். ஆர்டிக்கில் 370 நீக்கம், அயோத்தி ராமர் கோவில், நீர் மேலாண்மை, 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல கஷ்டமான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இதனை முன்னிறுத்தியே நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 5 April 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  3. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  4. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  6. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  9. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  10. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!