/* */

மே 5 திருச்சி வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு: விக்கிரமராஜா

மே 5ம் தேதி திருச்சியில் வணிகர் சங்க மாநாடு தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக, பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மே 5 திருச்சி வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு: விக்கிரமராஜா
X

நாமக்கல்லில் நடைபெற்ற, வணிகர் சங்க பேரமைப்பு, மண்டல பொதுக்குழு கூட்டத்தில், மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், சேலம் மண்டல பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மண்டல தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தலைவர் எஸ்.கே.பெரியசாமி, மாநில மூத்த துணை தலைவர் எஸ்.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வரவேற்றார். பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருகிற மே மாதம் 5-ந் தேதி திருச்சியில் வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்வார்கள். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கடை வாடகை பிரச்சினை தீராத ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு மாநாட்டில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடைகள் நடத்த லைசென்ஸ் பெற பல அரசு அலுவலகங்களை அனுக வேண்டியுள்ளது. ஆன்லைன் முறையில் ஒரே லைசென்ஸ் பெறும் முறையை அமல்படுத்த மாநாட்டில் வலியுறுத்த உள்ளோம். நிச்சயமாக இந்த மாநாடு வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால், சர்வதேச மார்க்கெட்டில், பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிறு கடை உரிமையாளர்கள் எப்போதும் பொருட்களை பதுக்குவது இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பதுக்கி வைக்கின்றனர். அவற்றை அரசு கண்காணிக்க வேண்டும். ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது.

கொரோனா ஊரடங்கால், கடந்த 2 ஆண்டுகளில் 13 சதவீத வியாபாரிகள் கடைகளை காலி செய்துவிட்டனர். 27 சதவீதம் பேர் தள்ளாடிக் கொண்டுள்ளனர். 40 சதவீதம் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து காணப்படுகிறார்கள். எங்களது மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பதாக அறிவித்துள்ளதால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகிறோம்.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் தற்போதுள்ள பஸ் நிலையம் அனைவருக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இதை மாற்றினால் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் வணிகர்சங்க பேரமைப்பின் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!