/* */

இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை.. சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்...

நாமக்கல் மாவட்டம், இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை.. சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்...
X

இலுப்பிலி ஏரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், இலுப்பிலியில் மிகப் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் பல நேரங்களில், ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், படகு இல்லம் அமைக்க ஏதுவாக வாகன நிறுத்துமிடம், சிறுவர்களை கவரும் வகையில் பூங்கா அமைக்க தேவையான இடம் உள்ளதா என்பது குறித்தும், சுற்றுலாத்தறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் அருகில், ராசாம்பாளயத்தில், சுற்றுலாத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கட்டிடத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அப்போது ஓட்டலை புதுப்பித்து உணவகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஒரு நாள் சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிதும் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் இலுப்பிலி ஏரியில், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்ளும் வகையில் படகு இல்லம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. படகு சவாரி மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகிவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இலுப்பிலி ஏரி ஏறத்தாழ 160 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. மேலும், கடந்த 7 ஆண்டுகளாக வெயில் காலங்களிலும் வற்றாத நிலையில் நீர் இருப்பு இருந்து வருகிறது. திருச்செங்கோடு பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தலம் இல்லாததை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஏரியில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய படகு இல்லம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாத்திய கூறுகள் இருப்பின் அடுத்த நிதியாண்டில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதே போன்று, நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் கொல்லிமலையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 14 ஏக்கரில் சூழல் சுற்றுலா நிறுவப்பட உள்ளது.அங்கு சாகச சுற்றுலா மையம் அமைக்கவும், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ. 3 கோடி அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவடைந்து கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் எனது சொந்த மாவட்டமான நாமக்கலில் ராசாம்பாளையம் பகுதியில், நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டலில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் புதுப்பிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த பகுதியில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு ஏக்கர் நிலம் எடுத்துக் கொண்டதால், இப்பொழுது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டடம் உள்ளது. இதர வசதிகளுடன் புதுப்பிப்பது உணவகத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

ஆய்வின்போது, நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் மஞ்சுளா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜதின், வட்டாட்சியர்கள் சக்திவேல், அப்பன்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 10 Dec 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  3. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  4. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  5. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  6. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  7. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  9. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  10. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...