/* */

லாரியை பறிமுதல் செய்த நிதி நிறுவனம் ரூ.20.8 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

லாரியை பறிமுதல் செய்த நிதி நிறுவனம் ரூ.20.8 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

HIGHLIGHTS

லாரியை பறிமுதல் செய்த நிதி நிறுவனம் ரூ.20.8 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
X

லாரி உரிமையாளரிடம் இருந்து, சட்டத்திற்கு புறம்பாக லாரியை பறிமுதல் செய்து எடுத்துச்சென்ற தனியார் நிதி நிறுவனம், ரூ. 20.80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் ராமசாமி மகன் தங்கவேல் (43). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ 28,25,000/- ஐ தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடனுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், எவ்வித காரணமும் இல்லாமல் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றுவிட்டனர். இந்த பிரச்சினை குறித்து தங்கவேல் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தனியார் நிதி நிறுவனத்தினர், சட்டப்பட்டி எவ்வித முன் அறிவிப்பும் செய்யாமல், லாரி உரிமையாளரிடம் இருந்து, லாரியை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் அவர்கள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட லாரியை ரூ. 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். ஆனால் தமக்கு ஏலத்தில் விற்பனை செய்வது குறித்து அறிவிப்பு எதுவும் தரவில்லை. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பின்னர் கணக்கு விவரங்களையும் தமக்கு தெரிவிக்கவில்லை. அடாவடியாக லாரியை பறிமுதல் செய்து நான்கில் மூன்று பங்கு விலை குறைவாக லாரியை விற்றதால் தமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சமூகத்தில் மிகுந்த அவமரியாதை ஏற்பட்டு விட்டது. இதனால் தன்னிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்த நிறுவனம் லாரியை பறிமுதல் செய்து கொண்டதால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ 23 லட்சம் நிவாரணமும், நிதி நிறுவனத்தின் செயல்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ரூ 5 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என்று வழக்கில் தங்கவேல் கேட்டிருந்தார்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இருந்து சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கும், நாமக்கல்லில் உள்ள கிளை அலுவலகத்துக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்ட போதும் அவர்கள் தரப்பில் பதில் எதுவும் தரவில்லை. இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து வாதங்களை கேட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட், உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், கடனை செலுத்த தவறினால், அறிவிப்பு கொடுத்து சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை பறிமுதல் செய்யாமல், சட்டவிரோதமாக வாகனத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதும், கடந்த 2018 ஆம் ஆண்டில் 30 லட்சம் மதிப்புடைய லாரியை இரண்டு வருடங்கள் கழித்து ரூ. 7,60,000 விலைக்கு, நிதி நிறுவனம் விற்பனை செய்துள்ளதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைவான விலைக்கு லாரி விற்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது நிதி நிறுவனம் தீய லாபம் அடைவதற்காக செயல்பட்டுள்ளது என்பதும், தவறான முறையில் வாகனம் விற்கப்பட்ட பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமலும் வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதும் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூபாய் 20 லட்சத்து 80 ஆயிரத்தை, மார்ச் 2020 முதல் பணம் வழங்கப்படும் வரை 12 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 24 April 2023 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு