/* */

நாமக்கல்லில் 3 நாட்கள் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிறைவு பெற்றது

நாமக்கல்லில் 3 நாட்கள் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிறைவு பெற்றது

HIGHLIGHTS

நாமக்கல்லில் 3 நாட்கள் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிறைவு பெற்றது
X

நாமக்கல் ஆட்டோ எக்ஸ்போ நிறைவு விழா நடைபெற்றது.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன், நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் மெக்கானிக்கல் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன் மற்றும் நாமக்கல் ஆட்டோநகர் அசோசியேசன் இணைந்து, ஆட்டோ எக்ஸ்போ - 2022 என்ற பெயரில் தென்னிந்திய மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கண்காட்சி, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள ஐஸ்வர்யம் மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அசோக் லேலண்ட், டெல்கோ, டெய்ம்லர், இந்தியன் ஆயில், ஜே.கே. டயர் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் , டயர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் இங்கு ஸ்டால் அமைத்திருந்தனர். கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எக்ஸ்போவை பார்வையிட்டனர்.

எக்ஸ்போ நிறைவு விழா மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி தலைமையில் நடைபெற்றது. ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சண்முகப்பா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறந்த அரங்குகளுக்கு கேடயம் வழங்கி பேசினார். ஏ.ஐ.எம்.டி.சி. துணைத்தலைவர் அனிதாவேலு, தென்மண்டல லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், டிரெய்லர் உரிமை.யாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, செயலாளர் தாமோதரன், எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், எம்.எம்.ஏ. தலைவர் கணேசன், எக்ஸ்போ கமிட்டி செயலாளர் சதீஷ், பொருளாளர் அருள், உதவி தலைவர் கார்த்திகேயன், இணை செயலாளர்கள் விஜயகுமார், குமரவேல் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Sep 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...