/* */

ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

Namakkal news- பரமத்தி வேலூரில் காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
X

Namakkal news- பரமத்திவேலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

Namakkal news, Namakkal news today-நாமக்கல், பரமத்தி வேலூரில் காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் துறை சார்பில், பொதுமக்களுக்கான குறைதீர் முகாம், நகர வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கீதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். ப.வேலூர்போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி முகாமிற்கு முன்னிலை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றை பரிசீலனை செய்து, மனுக்களின் மீது விசாரணை நடத்தினார்.

போலீஸ் நிலையங்களில் நிலுவையிலுள்ள குடும்ப பிரச்சினை, இடப்பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் 15 புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2 மனுக்கள் மீது, உரிய விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அளித்த புகார் மனு அடிப்படையில் நேரடியாக சென்று மனுக்கள் விசாரிக்கப்பட்டது. முகாமில் எஸ்.ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு