/* */

கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள்
X

பைல் படம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பயை ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. வழக்கமாக வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்கவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊக்க ஊதியத் தொகை வழங்கவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என தமிழக அரசு தெரிவித்து வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், ஏமாற்றி வருகிறது. அதனால், அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், 5 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, கடந்த 2 நாட்களாக ஆசிரியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, விடைத்தாள் திருத்தும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரவலில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத சூழல் இன்றுவரை நீடித்து வருகிறது. இப்பிரச்னையில் உடனடியாக தீர்வு கண்டு, சம்பளம் பெறாமல் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகின்றனர்

Updated On: 3 Jun 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...