/* */

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்க விழா

Namakkal News -நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியில் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்க விழா
X

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மாணவியர் பேரவையை, கால்நடை மருத்துவக்கல்லூரி விரிவாக்கத்துறை தலைவர் டாக்டர் அகிலா துவக்கி வைத்தார். அருகில் கல்லூரி சேர்மன் செங்கோடன், செயலாளர் நல்லுசாமி, முதல்வர் லட்சுமி நாராயணன் ஆகியோர்.

Namakkal News - நாமக்கல் டிரினிடிர மகளிர் கலை அறிவியில் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில், டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாண்டு பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பிற்கு மாணவியர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது முதலாண்டு வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதையொட்டி கல்லூரியில், மாணவியர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பி.எஸ்.கே செங்கோடன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

செயலாளர் தென்பாண்டியன் நல்லுசாமி, செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார். உயர்கல்வி இயக்குநர் அரசுபரமேசுவரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்கத்துறை பேராசிரியர் டாக்டர் அகிலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவியர் பேரவையைத் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இன்று உலகம் மிகச்சிறிதாக மாறிவிட்டது. மாணவிகள் அன்றாடம் நடக்கும் உள்ளூர், வெளியூர் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை செய்தி ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில், ஒவ்வொரு துறையிலும் நடந்துவரும் நிகழ்வுகளை அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டும். உலகம் முழுவதும், குறிப்பாக மகளிர் பல்வேறு வகைகளில், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள். ஒவ்வொரு மாணவியும் தங்களுக்கான, குறிக்கோளை நிர்ணயித்துக் காண்டு அதனை அடைய முழு மூச்சுடன் செயல்படவேண்டும். உலக அளவில் போட்டியிடுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ப நம் திறøமைய வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது இண்டர்நெட் மூலமே அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. அனைவருக்கும் இண்டர்நெட் வசதி அத்தியாவசிய தேவையாக உள்ளது. அதே நேரம், ஆண்ட்ராய்ட், ஸ்மார்ட் செல்போன்களில் அதிக நேரம் செலவிடுவது நம் முன்னேற்றத்திற்கு தடைக்கல் என்பதை உனர வேண்டும். செல் போன்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத இண்டர்நெட் விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் தரக்கூடாது. கடின உழைப்பு என்றுமே வீணாவதில்லை என்று கூறினார்.

கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உளிட்ட 1400க்கும் அதிகமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாணவிர் பேரவைத் தலைவர் அபிநயா, செயலாளர் ஜோவிதா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Oct 2022 5:52 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு