/* */

பதிவு சான்று இன்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர்

பதிவு சான்று இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பதிவு சான்று இன்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர்
X

இது குறித்து சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், எள், நெல், ராகி, காய்கறி பயிர்கள், பயறுவகை, எண்ணெய்வித்து மற்றும் கால்நடை தீவனப்பயிர்கள் போன்றவை அதிகப்படியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வேளாண்மைத்துறை மட்டுமின்றி தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்து விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, அனைத்து தனியார் ரகம் மற்றும் வீரிய ரக விதைகளை பதிவு செய்ய வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் பதிவு சான்று வழங்கியுள்ளது.

இதன்படி விதை விற்பனை உரிமம் பெற்ற அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பதிவு சான்றினை ஒவ்வொரு தனியார் ரகத்திற்கும் உற்பத்தியாளர்களிடம் பெற்று விதை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இச்சான்றுகளை விதை ஆய்வாளர்களிடம், ஆய்வின்போது சமர்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாத, விதை விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டத்தின் கீழ் விதை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Jan 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு