/* */

கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிசேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில்  கும்பாபிசேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்:

கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயிலில் கும்பாபிசேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூர் கிராமத்தில், கொங்கு வேளாளர் சமூகத்தின் விலையன்குலத்தாருக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில், ஸ்ரீ வன்னிமர கணபதி, ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ மதுரைவீரசாமி, புற்றுக்கண் நாகராஜா கோயில்கள் மற்றும் குதிரை வாகனம், குறிஞ்சி சிலைகள், ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் பெரும் பொருட்செலவில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

இதையொட்டி கோயில் மகா கும்பாபிசேக விழா நிகழ்ச்சிகள் கடந்த ஆக. 28ம் தேதி திங்கள்கிழமை கிராம சாந்தியுடன் துவங்கியது. 29ம் தேதி மாலை வாஸ்து பூஜை, பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. மொத்தம் 49 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 6 கால யாக சாலை பூஜைகள் துவங்கியது.

செப். 1ம் தேதி காலை 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ப.வேலூர் காவிரி ஆற்றிற்கு சென்று, புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு, யானை, குதிரை, ஒட்டகம், பசு முன்னே வர மங்கள இசையுடன், ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். காலை 8.30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைற்றது.

மாலை 6 மணிக்கு 3ம் கால யாசாலைபூஜைகயும், மாலை 6.30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் மற்றும் கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. செப். 2ம் தேதி காலை 8.30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 5ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது.


இன்று செப். 3ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 5 மணிக்கு, 6ம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. காலை 9 மணிக்கு, அதிர்வேட்டுகள் முழங்க, மேள தாளத்துடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிவாச்சாரியார்களால் முதலில் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, ஸ்ரீ செல்லாண்டியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிசேகம், தச தரிசனம், கோபூஜை நடைபெற்று மகா தீபாராதணை நிறைவு பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான முக்கிய பிரமுகர்கள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டனர்.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா வேலுசாமி மற்றும் திருப்பணிக்குழுவினர், விலையன்குல குடிப்பாட்டு பங்காளிகள் செய்திருந்தனர். கும்பாபிசேக விழாவைத் தொடர்ந்து நாளை 4ம் தேதி முதல் 48 நாட்கள் திருக்கோயிலில் மண்டல பூஜை துவங்குகிறது.

Updated On: 3 Sep 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு