/* */

நாமக்கல்: 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்: 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கிய கலெக்டர்
X

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், பொதுமக்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.

மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 329 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 11 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டுகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.5.55 லட்சம் மதிப்பில் சிறுதொழில் தொடங்கிட நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்