சேலம்- கரூர் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பயணிகளின் கோரிக்கையை ஏற்று சேலம் - கரூர் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலம்- கரூர் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

சேலம் கரூர் அகல ரயில் பாதையில், காலை மற்றும் மாலை இரு வேளைகளில் சேலம் - கரூர் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோன காலத்திற்கு பின்பு காலை கரூர் - சேலம் ரயிலும், மாலையில் சேலம் - கரூர் ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. இந்த ரயில் காலை 10:40 க்கு சேலம் சென்றது. இதனால் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லவோர் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்த ரயிலை காலை 9 மணிக்குள் சேலம் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த பிரச்சினை நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் எம்.பி ராஜேஷ் குமாரிடம் தெரிவிக்கப்படடது.

இதையொட்டி சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளை ராஜேஷ்குமார் எம்.பி சந்தித்து இந்த பிரச்சனை பற்றி பேசினார். சேலம் கோட்ட அதிகாரிகள் உடனே இதற்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று (27ம் தேதி ) முதல் கரூர் - சேலம் மற்றும் சேலம் - கரூர் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றி இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி கரூர் - சேலம் ரயில் காலை 7:30 மணிக்கு கரூரில் இருந்து கிளம்பி நாமக்கல் 8:10 க்கு வந்துசேரும், பின்னர் இந்த ரயில் சேலத்துக்கு காலை 9.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக சேலம் - கரூர் ரயில் மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி, நாமக்கல் 7:01 க்கு வந்து சேரும், பின்னர் இரவு 7.45 மணிக்கு கரூர் சென்றடையும்.

இதன் மூலம் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி செல்வோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்த சேலம் கோட்ட அதிகாரிகளுக்கும், எம்.பி ராஜேஸ்குமாருக்கும் நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 Jun 2022 8:45 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 2. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 3. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 4. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 5. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 6. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 8. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 9. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
 10. கலசப்பாக்கம்
  திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு