/* */

விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற, அகில இந்திய விஸ்வகர்மா பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில், தேசிய தலைவர் குமார் பேசினார்.

நாமக்கல்லில் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், புதுச்சேரி மாநில தலைவர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜெகதீசன் வரவேற்றார்.

பொதுச்செயலாளர் மருதராஜ் கணேஷ், தேசிய பொருளாளர் சிவக்குமார், அகில இந்திய பாரதிய ஸ்வர்ணகர் சங்கம் காஷ்மீர் சிங் ராஜ்புட், சட்ட ஆலோசகர் மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையின்யின் படி விஸ்வகர்ம சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அறங்காவலர் குழுவில் விஸ்வகர்மா இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில துணைப்பொதுச்செயலாளர் மணி நன்றி கூறினார்.

Updated On: 3 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!