/* */

மணல் தட்டுப்பாடு: கூடுதல் குவாரிகளை திறக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில், மணல் கிடைக்காமல் கட்டுமானப்பணிகள் முடங்கியுள்ளதால், கூடுதலாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என்று, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மணல் தட்டுப்பாடு: கூடுதல் குவாரிகளை திறக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
X

இது குறிதத்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும், கட்டுமானப்பணிகளுக்கு தேவையான மணலை ஏற்றிச்செல்ல, அதற்கென வடிவமைக்கப்பட்ட 50,000க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் உள்ளன. அரசு மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த லாரிகள் அனைத்தும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 30 லட்சம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் லாரி உரிமையாளர்கள் லாரிகளுக்கு நிதிநிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மணல் குவாரிகள் இயக்கப்படாததால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடங்கிப்போய் உள்ளது.

கடந்த ஆட்சியில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் இன்றி அனைத்து லாரிகளுக்கும் வரிசைப்படி ஆன்லைன் பதிவு மூலம் மணல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு அதிக எண்ணிக்கையிலான குவாரிகளை திறக்காமல், குறைந்த எண்ணிக்கையிலான மணல் குவாரிகளை திறந்து வரிசைப்படி இல்லாமல் முறைகேடாக மணல் வழங்கப்பட்டது.

தரமற்ற செயற்கை மணல் பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் உறுதித்தன்மையின்றி இடிந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து செயற்கை மணல் குவாரிகளையும் ஆய்வு செய்து, முறையாக பொதுப்பணித்துறையிடம் இருந்து தரச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் குவாரிகளை தடை செய்ய வேண்டும்.

தனியார் மற்றும் அரசு கட்டுமானப்பணிகள் தங்குதடையின்றி நடைபெறவும், பயனாளிகளுக்கு கட்டுமானத்திற்கு தேவையான மணல் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மாவட்டங்கள் தோறும் கிராவல் மண் மற்றும் சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 4 Jun 2021 5:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!