/* */

காவிரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

காவிரி ஆற்றில் நீரில் முழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ரூ.1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காவிரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
X

காவிரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து, உதவித்தொகைக்கான காசோலைகளை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

காவிரி ஆற்றில் நீரில் முழ்கி உயிரிழந்த, இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ரூ. 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 224 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குமாரபாளையம் தாலுகா, குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த கனகா மகன் வசந்தகுமார், ப.வேலூர் வெங்கரையை சேர்ந்த சுப்ரமணி - தெய்வாணை மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

டிஆர்ஓ (பொ) மல்லிகா, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்