/* */

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாட அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த விவசாயிகள் கோரிக்கை

namakkal news, namakkal news today- காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர், கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று, விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாட அரசை  தமிழக முதல்வர் வலியுறுத்த விவசாயிகள் கோரிக்கை
X

namakkal news, namakkal news today- தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி.

namakkal news, namakkal news today- இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக காவிரி டெல்டா வியாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் தற்போது, சுமார் 5 லட்சம் ஏக்களில் தற்போது நடவுப்பணி மற்றும் நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை பொழியாததாலும், அணையில் இருந்து பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தன்ணீர் திறந்துள்ளாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழ் வெகுவாக குறைந்து வருகிறது. குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதம் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் பருவமழை இயல்பாக பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி அணையிலிருந்து திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அணையில் இருத்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முழுமையாக கடைமடை சென்று சேரவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை எற்படுமோ என்று டெல்டா விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

காவிரி தி நீர் ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.1 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். இதை வழங்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் பிடிவாதமாக பேசி வருகிறார். காவிரி நதி நீர் ஆணை உத்தரவுப்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கினால்தான், தமிழக டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

எனவே காவிரி டெல்டாவிவசாயிகளன் நலன் கருதி, தமிழக முதல்வரும், நீர்ப்பாசன அமைச்சரும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும், கர்நாடகா அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, காவிரியில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 July 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  7. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?