/* */

நாமக்கல் மாவட்டத்தில் 9-ம் தேதி ரேஷன் கார்டு தாரர்கள் குறை தீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 9-ம் தேதி ரேஷன் கார்டு தாரர்கள் குறை தீர் முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 9-ம் தேதி ரேஷன் கார்டு தாரர்கள் குறை தீர் முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம்,செல் நம்பர் பதிவு, புதிய ரேஷன் கார்டு கோருதல் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதத்திற்கான ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் 9ம் தேதி சனிக்கிழமை காலை 10மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் மற்றும் குமாரபாளையம் சிவில் சப்ளை தாசில்தார் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட தாசில்தார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் சம்மந்மான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 July 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!