/* */

நாமக்கல் 39 வார்டிலும் திமுக வெற்றி பெற வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி

நாமக்கல் நகராட்சி தேர்தலில் 39 வார்டுகளிலும், திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி பேசினார்.

HIGHLIGHTS

நாமக்கல் 39 வார்டிலும் திமுக வெற்றி பெற வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி
X

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில்,  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி  கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கினார். அருகில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் நகர திமுக சார்பில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பி ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கிழக்கு நகர பொறுப்பாளர் பூபதி தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இதில், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: தேர்தல் உறுதிமொழிகளை, முதல்வர் வேகமாக நிறைவேற்றி வருகிறார். தேர்வு நிலை நகராட்சியாக இருந்த நாமக்கல் இப்போது சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில் வேளாண் விளைபொருட்கள் பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகள் செப்பனிடப்படுகிறது. நாமக்கல் குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வரும் உள்ளாட்சித்தேர்தலில் இதுபோன்ற தமிழக அரசின் சாதனைகளை திமுகவினர் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கூறினார்.

திமுக மாநில நிர்வாகிகள் ராணி, மணிமாறன், தெற்கு நகர பொறுப்பாளர் ராணாஆனந்த், முன்னாள் கவுன்சிலர் சவரணன், மூர்த்தி, பிரபு, சென்னிமலை, பாப்சரவணன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...