/* */

புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே 11ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர், பெரும்பாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 6 மகள்கள் இருந்தனர். இதில் 4வது மகள் சவுமியா (17), ஏளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 25-ந் தேதி பள்ளிக்கு சென்ற சவுமியா, தேர்வு எழுதி விட்டு பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் அவரது தாயார் ஜெயலட்சுமி, அப்பகுதியில் உள்ள மூத்த மகள் வனிதா வீட்டிற்கு சென்று விட்டார்.

மாலை 6 மணி அளவில் திரும்பி வந்தபோது சவுமியா விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சவுமியா பெரியமணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வரும் வழியிலேயே அவர் பரிதாமபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை ராமசாமி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவுமியா ஏற்கனவே தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

Updated On: 27 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?