/* */

குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு

குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக் கோரி, நாமக்கல் கலெக்டரிடம் விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
X

குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக்கோரி மனு கொடுப்பதற்காக,  விஎச்பி அமைப்பினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம், குமாரபாளையம் கல்லங்காட்டு வலசு தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிஷத் நகர தலைவர் ராஜேந்திரன் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம், பல்வேறு இடங்களில் உள்ளது. இதில் மொத்தம் 2 ஏக்கர் 10 செண்ட் நிலம், அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகிறார்.

இதில் பட்டா மாறுதல் செய்து சட்டத்திற்கு புறம்பாக அடுக்குமாடி கட்டிடம் மற்றும் கடைகள், வணிக வளாகம் அமைத்து வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகிறார். இந்த கோயில் நிலத்தை, பட்டா மாறுதல் செய்து, வாடகை வசூலிக்கும் தனியாரிடம் இருந்து மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் கோயில் பெயரில் இருந்த பட்டா மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 9:49 AM GMT

Related News