/* */

நாமக்கல்லில் ஒரு டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட, ஒரு டன் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரு டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
X

நாமக்கல் பஸ் நிலையம் அருகில் சுமார் 1 டன் எடையுள்ள, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட, ஒரு டன் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டு குட்கா, பான் பராக் போன்ற புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க தமிழ முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி இன்று காலை, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை துறை தர நிர்ணய அலுவலர் அருண் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, நாமக்கல் போலீஸ் உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட குழுவினர், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள, மேட்டுத் தெரு பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது பல கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை அடங்கிய பாக்கு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் இது குறித்து, கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினர் இதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட, ஒரு டன் மதிப்புள்ள பொருட்களை போலீசாரின் துணையுடன் உணவு, கலப்பட நியமன அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், சுமார் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்த பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Aug 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்