/* */

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம்

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம்
X

பட விளக்கம் : நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு கோயில் சார்பில், பிரசாதம் வழங்கப்பட்டது.

நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம்

நாமக்கல்,

நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் முருகன் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் எல்.முகனின் சொந்த ஊர் நாமக்கல் அருகே உள்ள கோனூர் ஆகும். இவர் தற்போது நீலகிரி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை 25ம் தேதி அவர் நீலகிரியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் இன்று திடீரென்று நாமக்கலிற்கு வருகை தந்தார். அவர் கோனூர் சென்று தனது தாய் தந்தையரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், தனது குலதெய்வ கோயிலான பரமத்தி-வேலூர் அடுத்த கே. புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நரசிம்மர் சுவாமி திருக்கோயில் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் கோயில் பிரகாரத்தை அவர் வலம் வந்தார். பின்னர் பாஜக மூத்த பிரமுகர்களை நேரில் சந்தித்த ஆசி பெற்றார். பின்னர் அவர் காரில் நீலகிரி புறப்பட்டு சென்றார். முன்னதாக, நாமக்கல் வருகை தந்த மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு, நகர பாஜக தலைவர் சரவணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 24 March 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு