/* */

நாமக்கல் மாவட்ட வக்ஃப் வாரியத்தில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் டூ வீலர் பெற விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் டூ வீலர் பெற வக்ஃப் வாரியத்தில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட வக்ஃப் வாரியத்தில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் டூ வீலர் பெற விண்ணப்பிக்கலாம்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்

நாமக்கல்:

மானிய விலையில் டூ வீலர் பெற வக்ஃப் வாரியத்தில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை செய்வதற்கு ஏதுவாக புதிய டூ வீலர்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு டூ வீலர் வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும், தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 18 வயதிலிருந்து 40 வயதிற்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் விண்ணப்பித்தால் மானியம் உதவி வழங்கப்படும். விருப்பமுள்ள உலமாக்கள் தேவையான சான்றுளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ ஆக. 5-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்

Updated On: 11 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது