/* */

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, பரபரப்பு

நாமக்கல் நகரில், வங்கி பெண் மேனேஜர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, பரபரப்பு
X

தற்கொலை செய்து கொண்ட வங்கி மேலாளர்.

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், இவரது மகள் அஞ்சனா (32), இவர் நாமக்கல்லில் உள்ள வங்கி கிளையில் மேனேஜராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது கணவர் அவரை விட்டுப்பிரிந்து அமெரிக்கா சென்றுவிட்டார்.

வங்கி மேனேஜர் அஞ்சனா, நாமக்கல் மோகனூர் ரோட்டில் தீரன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார்.

திங்கள் கிழமை காலை நாமக்கல் திரும்பி வந்த அவர் பேங்கிற்கு பணிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது தாயார் போன் செய்தபோது போன் எடுக்கவில்லை.

வங்கியில் அவருடன் பணிபுரியும் அலுவலர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஞ்சனா வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் கிடைத்ததும், நாமக்கல் போலீசார் அங்கு சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளர் ஏன் இறந்தார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Aug 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?