/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேக பூஜை

namakkal news, namakkal news today- ஐப்பசி மாதம் முதல் ஞாயிறு தினமான இன்று, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேக பூஜை
X

namakkal news, namakkal news today -ஐப்பசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.

namakkal news, namakkal news today - இன்று ஐப்பசி மாதம் முதல் ஞாயிறு தினமான இன்று, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரில், ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக எதிரில், ஒரே கல்லினால் உருவான மலையைக் குடைந்து குடவறைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் கோவிலில் உள்ள ஸ்ரீ நரசிம்மரையும், சாலகிராம மலைøயையும் வணங்கி நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் எடுத்து வந்த சாலகிராமம் மலையாக உருவாகி உள்ளதால், அந்த மலை வெட்டவெளியில் உள்ளது. இதுபோலவே ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு, மேற்கூரை இல்லாமல் அமைந்துள்ளது சிறப்பாகும்.

தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தினசரி சுவாமிக்கு 1,008 வடை மலை அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும், தொடர்ந்து வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு, மலர் அங்கி, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரம் செய்யப்படும். பங்குணி மாதத்தில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்காநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு முப்பெரும் தேர்த் திருவிழா நடைபெறும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஐப்பசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கட்டளைதாரரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், நாமக்கல் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Updated On: 23 Oct 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்