/* */

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல்
X

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்மணி, தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட வர்த்தகப்பிரிவு அமைப்பாளர், பரமத்தி ராகா ஆயில் மில் உரிமையாளர் தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

நாமக்கல் சேலம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அலுலகத்தில் இருந்து, மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில், முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்எல்ஏக்கள் பரமத்திவேலூர் சேகர், சங்ககிரி சுந்தரராஜ், நாமக்கல் நகர செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட திரளான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆபீசிற்கு வந்தனர். பின்னர் வேட்பாளர் தமிழ்மணி, மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மாற்று வேட்பாளராக, தமிழ்மணியின் மகள் டாக்டர் யாழிணி (37) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் தமிழ்மணி (64) எம்.எஸ்சி (அக்ரி) முதுகலை பட்டம் படித்துள்ளார். 1984ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் அரசு வேலையில் பணியாற்றி, பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். 1993ம் ஆண்டு முதல் பரமத்தி அருகே ராகா ஆயில் மில் என்ற சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார்.

மேலும் விவசாயத்தில் ஈடுபட்டு பாரம்பரிய பயிர் வகைகளை பயிரிட்டு வருகிறார். இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலை மேலாண்மைக்குழு மற்றும் நிதிக்குழு உறுப்பினராக கடந்த 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.

Updated On: 25 March 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை