/* */

குடியிருப்புகளுக்குள் புகுந்தது நாமக்கல் கொண்டி செட்டி பட்டி ஏரி நீர்

நாமக்கல் கொண்டி செட்டி பட்டி ஏரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

குடியிருப்புகளுக்குள் புகுந்தது நாமக்கல் கொண்டி செட்டி பட்டி ஏரி நீர்
X
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

கொண்டிசெட்டிப்பட்டி ஏரி நிரம்பி வழிந்ததால், வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதற்காக செய்யப்படும் மாற்று ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும், கடந்த 3 மாதங்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. கன மழையால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 22க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் குளங்களும் நிரம்பி உள்ளன. நகரில் தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அவ்வப்போது நகரில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.

நாமக்கல் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், நகராட்சிக்கு உட்பட்ட, 38வது வார்டு, கொண்டிசெட்டிபட்டி ஏரி பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிரம்பி வழிகிறது. இதனால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, வெள்ளநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏரி அருகே கால்வாய் அமைத்து, குழாய் மூலம் நீரை வெளியேற்றி, குன்னிமரத்தான் கோவில் அருகில் இருக்கும் ஏரிக்கு கொண்டு செல்லும் பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஏரியில் வெளியேறும் உபரி நீரால், பொதுமக்கள் பாதிக்காத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். நாமக்கல் தெற்கு நகர தி.மு.க. செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கவுன்சிலர் ஈஸ்வரன், நகராட்சி உதவி செயற்பொறியாளர் குணசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதே போல் நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்து, 3வது வார்டில் போதுமான குடிநீர் வசதி இல்லாததால் சுமார் 150 வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குடிநீர் வசதி வேண்டி நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையொட்டி, எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியை, நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். மோகனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார், டவுன் பஞ்சாயத்து தி.மு.க. செயலாளர் செல்லவேல், மாநில தொழிலாளர் அணி இணைச் செயலாளர் கைலாசம், அவைத் தலைவர் குருசாமி, துணைச் செயலாளர் கோவிந்தராஜ், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் குமரவேல், ஜோதி மகேஸ்வரி, ரம்யா, கிருஷ்ணவேணி, மீனாம்பாள், கிருஷ்ணன், சரண்யாதேவி, பழனி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Oct 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!