/* */

மாநில பயிர் விளைச்சல் போட்டியில் நாமக்கல் விவசாயிக்கு இரண்டாமிடம்

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற, நாமக்கல் மாவட்ட விவசாயிக்கு எம்எல்ஏ ராமலிங்கம் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

மாநில பயிர் விளைச்சல் போட்டியில்  நாமக்கல் விவசாயிக்கு இரண்டாமிடம்
X

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற நாமக்கல் மாவட்ட விவசாயி குமாரசாமிக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் பரிசு வழங்கினார். அருகில் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன்.

வேளாண்மைத்துறை சார்பில், 2019-20ம் ஆண்டிற்கு மாநில அளவிலான பயிர்விளைச்சல் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் தாத்தையங்கார்ப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் இப்போட்டியில் பங்கேற்றார்.

அவர் ஒரு ஏக்கர் பரப்பில் பாசிப்பயறு பயிரிட்டு 2,750 கிலோ மகசூல் பெற்றார். அவருக்கு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது.

இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், புதுச்சத்திரம் உதவி இயக்குனர் பேபிகலா, வேளாண்மை அலுவலர் தரணியா, உதவி அலுவலர் பழனிவேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  4. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  6. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  7. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  8. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  9. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!