/* */

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகள்: தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகள்: தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு
X

உள்ளாட்சி இடைத்ததேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பெட்டிகளை, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் பார்வையாளர் சிவசண்முகராஜா, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 இடங்களக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 10 இடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு அக். 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 63 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களை, தேர்தல் கமிஷனர் சிவசண்முக ராஜா, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக, மொத்தம் 159 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 36,299 ஆண் வாக்காளர்கள், 37,732 பெண் வாக்காளர்கள், 6 திருநங்கைகள் என மொத்தம் 74,037 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் கிடையாது. வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாக்குப்பெட்டிகள் தயார் செய்யம் பணி நடைபெற்று வருகிறது. வாக்குப்பெட்டிகளையும் தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர்.

வெண்ணந்தூர் ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 8 பேர் போட்டியிடுகின்றனர். ஆவல்நாயக்கன்பட்டி, நடுக்கோம்பை பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகி விட்டதால் குப்பனாம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, கூடச்சேரி ஆகிய 3 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 14 பேர் போட்டியிடுகின்றனர். 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 8 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள 10 உறுப்பினர் பதவிக்கு 29 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு 63 பேர் களத்தில் உள்ளனர். வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Updated On: 3 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!