/* */

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள்

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 14.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள்
X

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும், சேந்தமங்கலம் (பழங்குடியினர்) தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், நாமக்கல் சட்டசபை தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதியில் 254 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளும் மற்றும் குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் 279 வாக்குச்சாவடிகளும் என 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,627 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் படி ராசிபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் 1,15,414 ஆண் வாக்காளர்களும், 1,21,995 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 6 பேர் என மொத்தம் 2,37,415 வாக்காளர்கள் உள்ளனர். சேந்தமங்கலம் (தனி) தொகுதியில் 1,19,058 ஆண் வாக்காளர்களும், 1,24,922 பெண் வாக்காளர்களும், 27 மற்றவர்கள் என மொத்தம் 2,44,007 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் தொகுதியில் 1,24,760 ஆண் வாக்காளர்களும், 1,34,184 பெண் வாக்காளர்களும், 49 மற்றவர்கள் என மொத்தம் 2,58,993 வாக்காளர்கள் உள்ளனர். பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் 1,06,926 ஆண் வாக்காளர்களும், 1,15,527 பெண் வாக்காளர்களும், 8 மற்றவர்கள் என மொத்தம் 2,22,461 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 1,12,645 ஆண் வாக்காளர்கள், 1,19,412 பெண் வாக்காளர்கள், 46 மற்றவர்கள் என மொத்தம் 2,32,103 வாக்காளர்கள் உள்ளனர். குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் 1,25,204 ஆண் வாக்காளர்கள் 1,31,998 பெண் வாக்காளர்கள், 49 மற்றவர்கள் என மொத்தம் 2,57,251 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்கள் 7,04,007 பேர், பெண் வாக்காளர்கள் 7,48,038 பேர் மற்றவர்கள் 185 என மொத்தம் 6 சட்டசபை தொகுதிகளில் 14,52,230 வாக்காளர்கள் உள்ளனர்.

1.11.2021 அன்று மொத்த வாக்காளர்கள் 14,46,106 பேர் இருந்தனர். புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 20,147 பேர், நீக்கம் செய்யப்பட்டவர்கள் 14,023 பேர். புதியதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை விரைவில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தங்களின் பெயர்களை வாக்காளர், பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணி, பிஆர்ஓ சீனிவாசன் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்