/* */

நாமக்கல் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் கலந்துகொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள்;  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

namakkal news, namakkal news today- எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தகவல் தொழில்நுட்பத்துறை அரசு செயலாளருமான குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் உமா.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி பஞ்சாயத்து, ஊத்துவாரியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மேட்டுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.5.64 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் மேம்பாடு செய்யும் பணியினையும், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளருமான குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் மேட்டுப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பொதுமக்களுக்கு உரிய காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார்.

பின்னர், மேட்டுப்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பயன் பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

மேலும் பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான், வேளாண் கருவிகள், சாமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு அவர் வழங்கினார். தொடர்ந்து எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கோனாங்கிப்பட்டியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஊரக கிடங்கினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, மகப்பேறு பிரிவு, பல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்டு மருத்துவ வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் அரசு செயலாளர் குமரகுருபரன் கேட்டறிந்தார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

அரசு நலத் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் நிகழ்ச்சியில் பேசியதாவது: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை, தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களின் நோக்கம் முழுமை அடையும் வகையில் செயல்படுத்தப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திடவேண்டும். நிர்வாக அனுமதி வழங்கிய வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ மணிமேகலை, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் சிவக்குமார், ஆர்டிஓக்கள் நாமக்கல் சரவணன், திருச்செங்கோடு கவுசல்யா, சிஇஓ மகேஸ்வரி, வேளாண் இணை இயக்குனர் துரைசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Jun 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...