/* */

ஆரியூர் முத்துசாமி திருக்கோயிலில் ஜனவரி 26 இல் கும்பாபிசேகம்.. ஏற்பாடுகள் தீவிரம்...

Ariyur Muthusamy Temple-நாமக்கல் மாவட்டம், ஆரியூர் ஸ்ரீ முத்துசாமி கோயில் மகா கும்பாபிசேக விழா ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஆரியூர் முத்துசாமி திருக்கோயிலில் ஜனவரி 26 இல் கும்பாபிசேகம்.. ஏற்பாடுகள் தீவிரம்...
X

மகா கும்பாபிசேக விழா நடைபெற உள்ள ஆரியூர் ஸ்ரீ முத்துசாமி திருக்கோயில்.

Ariyur Muthusamy Temple-நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூரில் பிரசித்தி பெற்ற முத்துசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் மணியன்குலம், கண்ணந்தை குல குடிப்பாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில், ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ சப்தகன்னிமார், ஸ்ரீ முத்துசாமி. ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகியதெய்வங்கள் எழுந்தருளியுள்ளன.

இந்தக் கோயிலில், கடந்த 2003 ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றத. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது திருப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையொட்டி ஜனவரி 26 ஆம் தேதி மகா கும்பிபசேக விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 24 ஆம் தேதி மகா கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணிக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மோகனூர் காவரி ஆற்றிற்கு சென்று தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வருவார்கள்.

பின்னர், மாலை 5 மணிக்கு யாக சாலை பிரவேசம் நடைபெற்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். 25 ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். மாலை மூன்றாம் காலயாசாலை பூஜையும் சுவாமிக்கு அஷ்டபந்த மருந்து சாற்றும் நிகழ்ச்சியில் நடைபெறும். இரவு கொங்கு கலாச்சார ஈசன் வள்ளிகும்மி மற்றும் ஒயிலாட்டம் நடைபெறும்.

26 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்கசாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். 7.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, தீர்தக்கடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். பின்னர், ஓய்வுபெற்ற போலீஸ் டிஐஜி ரவி முன்னிலையில், அருள்மிகு மகா கணபதி, சப்தகன்னிமார், முத்துசாமி, கருப்பண்ணசாமி ஆலய கோபுரங்களுக்கு கும்பாபிசேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து மூலவர் சாமிக்கு மகா அபிசேகம், தச தானம், தச தரிசனம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெறும். தெடார்ந்து பக்தர்களுக்கு பிசாதம் வழங்கப்படும். கோயிலுக்கு சுமார் 6 ஆயிரம் குடிப்பாட்டு மக்கள் உள்ளதால் கும்பாபிசேகம் விழாவில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பாபிசேக விழாவை முன்னிட்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்களும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாட்களும் மோகனூர் பஸ் நிலையம் மற்றும் தோப்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் கமிட்டி தலைவரும், தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவருமான பி.எஸ்.கே. பெரியசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Feb 2024 9:28 AM GMT

Related News