/* */

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி திட்டங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை   சாகுபடி திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு
X

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை திட்ட செயல்பாடுகளை,  கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் மூலம் நுண்ணீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், பயிர் மேலாண்மை, பந்தல் சாகுபடி, பயிர் சாகுபடிக்கான விதை உற்பத்தி, பயிர் சாகுபடியுடன் இணைந்து ஆடு, மாடு, கோழி வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், தேனி வளர்த்தல் ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் பல திட்டப்பணிகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன. புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செல்லப்பம்பட்டி, எ.உடுப்பம், சேவாகவுண்டம்பாளையம், ஆர்.புளியம்பட்டி கிராமங்களில் வேளாண், தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளிடம் சாகுபடி முறைகள், விற்பனை மற்றும் லாபம் ஈட்டுதல் குறித்து கலந்தாய்வு செய்தார்.

ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஜெகதீசன், புதுச்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் பேபிகலா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் சேரலாதன், பால்ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!