/* */

நாமக்கல் மாவட்டம்: 19,867 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 86 மையங்களில் மொத்தம் 19,867 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம்: 19,867 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு  எழுதுகின்றனர்
X

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில், பொதுத்தேர்வு விணாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அனைத்து பொதுத் தேர்வுகளையும் முழுமையாக நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, நாளை மே 5 முதல் 28ம் தேதி வரை பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை, 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9,729 மாணவர்கள், 10,138 மாணவிகள் என மொத்தம் 19,867 பேர் 86 மையங்களில் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களுக்காக 2 சிறப்பு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வைக் கண்காணிக்க 86 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 240 பறக்கும்படையினர், கட்டுக்காப்பு, வழித்தட அலுவலர்கள் 240 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் கெரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மையங்களுக்கு வந்துவிட வேண்டும். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 6ம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்:

10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, நாளை 6ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 304 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10,954 மாணவர்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 பேர், 89 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் முதன்மைக் கண்காணிப்பாளர், அறைக் கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 1,600 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல வருகிற 10ம் தேதி துவங்கும், 11-ஆம் வகுப்பு தேர்வை, 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9,988 மாணவர்கள், 9,853 மாணவிகள் என மொத்தம் 19,842 பேர் 86 மையங்களில் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகம் உட்பட 10 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் மாணவர்களின் தேர்வுக்கூட ஹால் டிக்கட் நம்பர் எழுதும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. பிளஸ் 2, 10, 11-ஆம் வகுப்புக்கான வினாத்தாள்கள் தேர்வு நாளன்று காலை 7 மணிக்கு மேல் அந்தந்த மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Updated On: 4 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!