/* */

எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தல் தள்ளி வைப்புக்கு அதிமுகவே காரணம்: எம்.பி.,

எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தல் தள்ளி வைப்புக்கு அதிமுகவே காரணம் என எம்.பி., ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தல் தள்ளி வைப்புக்கு அதிமுகவே காரணம்: எம்.பி.,
X

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், எம்.பி ராஜேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த 10 பேரும், திமுகவைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர். ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் கடந்த 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 10 பேரை காணவில்லை என்று பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ளதால், தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதையொட்டி தேர்தல் நடைபெறவில்லை. திமுக தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்தியுள்ளதாகவும், அதிமுக கவுன்சிலர்கøளை யாரும் கடத்தவில்லை. அவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள். மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்றும் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார், மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கோர்ட் கெடு விதித்ததை தொடர்ந்து ஊரக உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் பல இடங்களில் தலைவர், துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், காலியாக இருந்த மற்ற இடங்களில் இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சிக்கு விரைவில் தேர்தல் நடத்த முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக எப்போது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சி என்பது பொதுமக்களுக்கு தெரியும்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 22ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் சம்மந்தமான அறிவிப்பை ஒன்றியக்குழு உறுப்பினர்களிடம் கொடுத்து அவர்களிடம் ஒப்புதல் பெறுவது வழக்கமான ஒன்று. அதன் அடிப்படையில் அரசு அலுவலர்கள் தேர்தல் அறிவிப்பை கொடுக்கச் சென்றபோது, அதிமுகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் அவர்களது வீட்டில் இல்லை.

இதனால் அந்த அறிவிப்பை அவர்களது உறவினர்களிடம் கொடுத்து ஒப்புதல் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் அதிமுக உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். உறுப்பினர்கள் வந்த பிறகு தேர்தல் நடத்தலாம் என்று மாவட்ட நிர்வாகம் தேர்தலை ஒத்திவைத்துள்ளது. இதில் திமுகவின் பங்கு எதுவும் இல்லை. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுகவினரை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று தவறான கருத்தைக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக வழக்கு தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

எருமப்பட்டி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினர்கள் 10 பேரையும், அதிமுகவினரே கடத்திச்சென்று முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான ஏலகிரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற விபரம் எங்களிடம் உள்ளது. அவர்கள் கோர்ட்டிற்கு சென்றால் நாங்கள் அதை கோர்ட்டில் ஒப்படைக்க தயாராக உள்ளோம். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு பெண் துணைத்தலைவராக தேர்வாகியுள்ளார். அதை நாங்கள் எவ்விதத்திலும் தடுக்க முயற்சிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

Updated On: 23 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி