/* */

லாரி ஆபீசில் புகுந்து ரூ. 80 ஆயிரம் திருட்டு: வைரலான வீடியோவால் பரபரப்பு

லாரி ஆபீசில் புகுந்து ரூ. 80 ஆயிரம் திருட்டு: வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

லாரி ஆபீசில் புகுந்து ரூ. 80 ஆயிரம் திருட்டு: வைரலான வீடியோவால் பரபரப்பு
X

பைல் படம்

நாமக்கல்லில் லாரி ஆபீஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 80 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல், வள்ளிபுரம் பைபாஸ் ரோடு அருகே லாரி மெக்கானிக்கல் பட்டறை, லாரி புக்கிங் ஆபீஸ், பைனான்ஸ் நிறுவனங்கள் பழைய இரும்புக்கடை மற்றும் டீ கடை போன்றவைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அந்த கடைகள் பூட்டப்பட்டிருந்தன. அடுத்த நாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு, லாரி புக்கிங் ஆபீஸ் உரிமையாளர் அன்பழகன் (44), பைனான்ஸ் உரிமையாளர் வெங்கடேசன் (52) ஆகியோர் வழக்கம் போல் அங்கு வந்து தங்கள் அலுவலகத்தை திறத்தனர்.

அப்போது, கடையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமாரக்களை ஆய்வு செய்தபோது, முன்தினம் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை, தலையில் குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர், அப்பகுதியில் இருந்த லாரி பட்டறை, பழைய இரும்பு கடை, லாரி ஆபிஸ், பைனான்ஸ் உள்ளிட்ட இடங்களில் இருந்த பீரோ, மேசைகளை உடைத்து, அதிலிருந்த ரொக்கப் பணம் மற்றும் மொபைல் போன்களை திருடிச் செல்வது தெரியவந்தது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் லாரி ஆபீசில் ரூ. 30 ஆயிரம் மற்றும் ஒரு மொபைல் போன், பைனான்ஸ் நிதிநிறுவனத்தில் ரூ. 40 ஆயிரம், மற்றொரு லாரி ஆபீசில் ரூ. 10 ஆயிரத்து 500 என, மொத்தம் ரூ. 80 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர்கள் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?