/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்டம் துவக்கம்

குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு தொடர் பிரச்சாரம் துவக்கம்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்டம் துவக்கம்
X

ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்ட பயிற்சி முகாமை, கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்து, விழிப்புணர்வு ஸ்டிக்கரை போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வியிடம் வழங்கினார். 

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, இளைஞர் நீதிக்குழுமம், சுகாதாரத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் விண்ணைத்தொடு, ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் ஆகிய நல்வழி காட்டுதல் திட்ட பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திட்டம் தொடர்பான ஸ்டிக்கர்களை வெளியிட்டுப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வளரிளம் பருவத்தினருக்கு இன்றைய செல்போன் உலகத்தில் ஏற்படும் திசைதிருப்ப முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுவித்து, சரியான இலக்கினை அடைய உறுதி எடுக்கச் செய்து, அவர்கள் கல்வி மற்றும் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையச் செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 177 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள விண்ணைத்தொடு வழிகாட்டுதல் திட்டம், நாமக்கல்லில் உள்ள 2,520 கிராமங்களில் உள்ள 13 வயது முதல் 18 வயது வரையுள்ள 45,000 வளரிளம் பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் என்ற தொடர் பிரச்சார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு தொடர் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள வளரிளம் பெண் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு வகுப்பை மேற்கொள்வார்கள்.

ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக அனைத்து வீடுகளிலும் எங்கள் குழந்தைக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்றோர்கள் ஏற்கச் செய்து, இந்த வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அவர்களின் வீடுகளின் முன் புறத்தில் ஒட்டப்பட உள்ளன. தற்போது பள்ளிகளில் படிக்கும் இளைய தலைமுறையினர் நினைத்தால் மட்டுமே வருங்காலத்தில் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். அத்தகைய திறனுடைய இளைய தலைமுறையினராகிய உங்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை அறிந்து தீர்வுகள் வழங்கிட காவல்துறையினர், சுகாதார துறையினர், பள்ளி கல்வித்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சமூக நலத்துறையினர், என்.ஜி.ஓ, 1098 உள்ளிட்ட அனைத்து துறையினர் இணைந்து செயல்பட உள்ளனர். மாணவ மாணவிகயர் இவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என க லெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பரிமளாதேவி, உதவித்திட்ட அலுவலர் டாக்டர் ரமேஷ், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


Updated On: 28 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?