/* */

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆட்சியர் உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன்.

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுதந்திர தின விழா, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா, தேசியக்கொடியை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் உமா, போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வென்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டனர். சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்தம் வாரிசுதாரர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

சுதந்திர தினவிழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500/- வீதம் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாட்கோ மூலம் 1 பயணியர் வாகனம், 2 டிராக்டர், 14 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு உத்தரவு என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.2.36 மதிப்பிட்டிலும், மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில், மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார். மாவட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய 35 போலீசார், 180 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 215 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வ ழங்கினார்.

விழாவில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ராசிபுரம் ஆர்.சி தூய இருதய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற மாபெரும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சாரதா, நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஏடிஎஸ்பிக்கள் கனகேஸ்வரி, ராஜூ, சப் கலெக்டர்கள் சரவணன், கவுசல்யா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Aug 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...