/* */

புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 98 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப்பணி: எம்எல்ஏ துவக்கம்

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 98 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப்பணி: எம்எல்ஏ துவக்கம்
X

புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 98 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டி பஞ்சாயத்து, நாகமநாயக்கனூர் முதல் தாண்டாகவுண்டனூர் சாலை வரை ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் 1.58 கி.மீ தூரம், பழைய ரோட்டை தரம் உயர்த்தி புதிய ரோடு போட அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி பஞ்சாயத்தில் டிஎஸ் ரோடு, அம்மாபாளையம் செல்லும் சாலை முதல் நொச்சிப்பட்டி வரை ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தி புதிய ரோடு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி புதிய ரோடுகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரோடு போடும் பணியை துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கவுதம், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மனேகரன், பஞ்சாயத்து தலைவர்கள் முத்துலட்சுமி, செல்வி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ராஜாராணி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சசிக்குமார், வக்கீல் சுகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Aug 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?