/* */

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரதம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உண்ணாவிரதம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

HIGHLIGHTS

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக  சார்பில் உண்ணாவிரதம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
X

நீட் தேர்வை ரத்த செய்யக்கோரி, நாமக்கல்லில் திமுக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், மேற்கு மாவட் திமுக செயலாளர் மதுரா செந்தில், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல் :

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, நாமக்கல்லில் திமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு மாணவர்களின் டாக்டராகும் கனவை நீட் தேர்வு சிதைத்துள்ளது. நீட் தேர்வு மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோர்களையும் பாதித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், மாநில கவர்னரையும் கண்டித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தரவின்படி, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் நகரில் பஸ் நிலையம் அருகில் உள்ள பூங்கா சாலையில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

போராட்டத்திற்கு, ராஜ்யசபா எம்.பியும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆனந்த்குமார், மருத்துவர் அணி துணைச் செயலாளர் ராஜேஸ்பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் தீபக்குமார், மாவட்ட இளைஞரணி, மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகராட்சித் தலைவர்கள் கலாநிதி, கவிதா, நளினி சுரேஷ்பாபு, செல்வராஜ், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் ராணி ஆகியோருடன்

நாமக்கல் நகர செயலாளர்கள் சிவகுமார், பூபதி, ராணா ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் கவுதம், பாலசுப்ரமணியம், அசோக்குமார், ராமசுவாமி, நவலடி, துரைசாமி, ஜெகநாதன், மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், குமார், செல்வம், ஞானசேகரன், தங்கவேல், பழனிவேல், தனரசு உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

Updated On: 20 Aug 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!