/* */

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க கோரிக்கை

கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசால் வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான  ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க கோரிக்கை
X

பைல் படம்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை நிறுத்தாமல், தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு, அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (இன்கிரிமெண்ட்) மத்திய அரசால் கடந்த 1.11.2021 அன்று வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை பல ஆண்டுகளாக தொடர்ந்து பெற்று வருகின்றனர். கடந்த ஆட்சியில் தற்போதைய தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டதை நீக்கி, பழைய முறையிலான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்குவோம் என்று அறிவித்தார். திமுக சட்டசபை தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக தற்போது தமிழகத்தில், அரசு பணியாளர் களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசால் வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகத்தில், மத்திய அரசை சார்ந்து வெளியிடப்பட்ட அரசு உத்தரவை ரத்து செய்து பழைய முறைப்படி ஊதிய உயர்வை வழங்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகு பல ஆயிரம் செலவு செய்து படித்து, கூடுதல் கல்வி தகுதியை பெற்றுள்ளதே ஆகும். எனவே உயர் கல்விக்கான ஊக்கத்தொகையை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும்.

மேலும் 10.3.2020 க்கு முன்பாக உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற பள்ளிக்கல்வித்துறை முன் அனுமதி பெற்று எம்ஃபில் முடித்துள்ள பலருக்கு ஊக்க ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசைப்போல், தமிழக அரசு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!