/* */

திருச்செங்கோட்டில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி : ஆட்சியர் பங்கேற்பு

திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி : ஆட்சியர் பங்கேற்பு
X

திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெற்ற, மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உமா பேசினார்.

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில், மாபெரும் தமிழ்க் கனவு என்ற பெயரில், பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளான பிப். 3ம் தேதி தொடங்கப்பட்டு ஏப். 24வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வகையில் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் கடந்த ஆக. 10ம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சியை துவக்கி வகித்து பேசினார். அறியப்படாத தமிழகம் என்னும் தலைப்பில் ஊடகவியளாளர் செந்தில்வேல் கருத்தாளராக கலந்துகொண்டு பேசினார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவ மணவிகளுக்கு உதவும் வகையில், நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை மையம், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண மாணவிகள் பார்வையிட்டனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக திருச்செங்கோடு தாலுகா, உஞ்சனை கிராமத்தில் வீட்டுமனை பட்டாக்களுக்கு ஆன்லைன் பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திம்மராவுத்தம்பட்டி கால்நடை மருந்தகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Sep 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...