/* */

கடன் பாக்கிக்காக லாரிகளை பறிமுதல் செய்யும் நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டம்

கடன் தொகையை செலுத்த முடியாத, லாரி உரிமையாளர்களின் லாரிகளை அடியாட்களை வைத்து பறிமுதல் செய்யும் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை.

HIGHLIGHTS

கடன் பாக்கிக்காக லாரிகளை பறிமுதல் செய்யும் நிதி  நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டம்
X

கடன் பாக்கிக்காக லாரிகளை பறிமுதல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்களைக் கண்டித்து, நாமக்கல்லில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு மற்றும் கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக லாரிப் போக்குவரத்து தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு லாரிகளுக்கான கடன் வசூலை 6 மாதம் தள்ளிவைத்து அறிவித்தது. தள்ளிவைக்கப்பட்ட கடன் தொகையை, கடன் தவணைக்காலம் முடியும் மாதத்தில் இருந்து கூடுதலாக 6 மாதத்தில் செலுத்தலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை தமிழகத்தில் உள்ள தனியார் துறை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஏற்கவில்லை.

தனியார் நிதி நிறுவனங்கள் குறைந்தது 2 மாத கடன் தவணைகள் உள்ள லாரிகளையும் அடியாட்களை வைத்து பறிமுதல் செய்கின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளை நடு வழியில் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்கின்றனர். இதனால் லாரி டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், தற்போது ஜிஎஸ்டி வரி செலுத்தி இ-வே பில் போட்டு சரக்கு அனுப்பும் வியாபாரிகள் குறிப்பிட்ட தேதிக்குள் தங்களின் சரக்கு டெலிவரி செய்யாவிட்டால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

தனியார் துறை நிதி நிறுவனங்கள் சட்டத்தை மீறி, சரக்கு ஏற்றி வரும் லாரிகளை நடு வழியில் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்வது, தமிழக லாரிகள் வெளிமாநிலங்களில் செல்லும்போது பறிமுதல் செய்வது, எவ்வித முன் அறிவிப்பும் இன்றி குண்டர்களை வைத்து மிரட்டி, லாரிகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். லாரிகளில் சரக்கு ஏற்றி வரும்போது, சரக்குடன் பறிமுதல் செய்வதால் சரக்கு அனுப்புபவர்கள், புக்கிங் ஏஜெண்டுகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடன் பாக்கிக்காக முன் அறிவிப்பின்றி லாரிகளை நடு வழியில் சரக்குடன் பறிமுதல் செய்யக்கூடாது. வெளி மாநிலங்களில் லாரிகளை பறிமுதல் செய்யக்கூடாது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதை லாரி உரிமையாளர்கள் புறக்கனிப்போம் என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ராஜசேகர், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்ட திரளான லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்