/* */

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 12,969 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் வழங்கல்
X

நாமக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், நகராட்சித் தலைவர் கலாநிதி. துணைத் தலைவர் பூபதி ஆகியோர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.பி. சின்ராஜ், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டசபை தொகுதியில் உள்ள 14 பள்ளிகளில் படிக்கும் 818 மாணவர்கள், 964 மாணவிகள் என மொத்தம் 1,782 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இன்ஜினியர் மணி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 18 பள்ளிகளில் படிக்கும் 865 மாணவர்கள், 873 மாணவிகள் என மொத்தம் 2,493 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சேந்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பள்ளிகளைச் சேர்ந்த 1,419 மாணவர்கள், 1,294 மாணவிகள் என 2,713 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பரமத்திவேலூரில் 19 பள்ளிகளைச் சேர்ந்த 865 மாணவர்கள், 873 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 1,738 பேருக்கும், திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 16 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,035 மாணவர்கள், 1,155 மாணவிகள் உள்ளிட்ட 2,187 பேருக்கும், குமாரபாளையம் தொகுதியில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 918 மாணவர்கள், 1,138 மாணவிகள் என மொத்தம் 2,056 பேருக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 103 பள்ளிகளைச் ÷ச்ந்த 6,385 மாணவர்கள், 6,584 மாணவிகள் என மொத்தம் 12,969 பேருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.

Updated On: 23 Aug 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்