/* */

நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கல்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்படிக்கும் மாணவர்களுக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கல்
X

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்படிக்கும் மாணவர்களுக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அருகில் நகராட்சித் தலைவர் கலாநிதி.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்படிக்கும் மாணவர்களுக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மோகனுர் ரோட்டில் அமைந்துள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 153 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, நகர்மன்ற உறுப்பினர்கள் டாக்டர் விஜய் ஆனந்த், சகுந்தலா, உதவி தலைமை ஆசிரியர் ராமு, ஆசிரியர்கள் ஜெகதீசன், சுமதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் உமாசங்கர், மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜன், பள்ளி மேலான்மை குழு தலைவர் தமிழ்வாணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Sep 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?