/* */

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி: 100 மாணவர்கள் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி: 100 மாணவர்கள் பங்கேற்பு
X

பைல் படம்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குனர் ஜோதி தலைமை வகித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு, தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி மாணவர்களுக்கு, அண்ணாவும் தமிழ் மலர்ச்சியும், அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசு ரூ. 5,000, 2-ம் பரிசு ரூ.3,000, 3-ம் பரிசு ரூ.2,000 மற்றும் ஆறுதல் பரிசாக, அரசு பள்ளிகளை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா ரூ.2,000 வீதம் வழங்கப்படும் என, தமிழ் வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 15 Sep 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?